பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு
மானூர் அருகே பெண்ணை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி (வயது 52). ெரயில்வேயில் கேட்கீப்பராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்த சுப்புலட்சுமி குழந்தைகளுடன், நெல்லை சந்திப்பில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வடக்கு வாகைக்குளத்தில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்கு சுப்புலட்சுமி வந்துள்ளார். அவரை கண்ட முத்துமாரி ஆத்திரம் அடைந்து தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சுப்புலட்சுமியை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.