பசு மாட்டை துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் மீது வழக்கு
ஏற்காடு:-
ஏற்காடு அருகே முன்விரோதத்தில் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்விரோதம்
ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் மகன் வரதராஜன் (வயது 42) என்பவருக்கும், வெங்கடாசலம் மகன் வடமன் (45) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன், தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக மின்சாரம் திருடியதாக ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வரதராஜன்தான் காரணம் என வடமன் நினைத்தார்.
மாட்டை சுட்டுக் கொன்றார்
இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கும் வரதராஜன் தான் காரணம் என ஆத்திரம் அடைந்த வடமன், தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு வரதராஜனுக்கு சொந்தமான பசுமாட்டை சுட்டதாக தெரிகிறது. இதில் பசுமாடு துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் விசாரணை நடத்தி வடமன் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினார். பசுமாடு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.