திருச்சி மத்திய சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல் தொடர்பாக 24 பேர் மீது வழக்கு


திருச்சி மத்திய சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல் தொடர்பாக 24 பேர் மீது வழக்கு
x

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல் தொடர்பாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

கே.கே.நகர்:

சிறைக்குள் கோஷ்டி மோதல்

திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி மதியம் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி காளிமுத்து என்ற வெள்ளை காளி, சிறை வார்டன் முத்துக்குமாரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினர் ஒன்று சேர்ந்தனர். இதற்கிடையே வெள்ளைக்காளிக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் திரண்டனர்.

இதையடுத்து சிறைக்குள் கைதிகள் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

24 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக சிறை அலுவலர் சண்முகசுந்தரம், கே.கே.நகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் காளிமுத்து என்ற வெள்ளை காளி, நவீன் நாகராஜன், கார்த்தி என்ற அகோரி கார்த்திக், ரவி என்ற கிராண்ட் ரவி, குப்பை கண்ணன், ரபிக், தயா, வெள்ளை ராஜ், விக்கி பாபு, கவுரிஸ் ஆகிய 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் வார்டன் முத்துக்குமாருக்கு ஆதரவாக வெள்ளைக் காளி கோஷ்டியினரை தாக்கியதாக ராஜ்குமார், பிரபு, சியான் பாண்டி, உதயகுமார், மகாராஜா, ஆகாஷ், வெள்ளைச்சாமி, ராஜா, முத்துமணி, தாமஸ், சச்சின், பறவை விஜய், நரேஷ், ராஜேஷ் ஆகிய 14 பேர் மீது 4 பிரிவுகளில் ேபாலீசார் வழக்குப்பதிவு ெசய்துள்ளனர்.


Next Story