சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம்
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் 4 மாத கர்ப்பத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், சிறுமியுடன் வேலை பார்த்த நாழிக்கல்பட்டியை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே அந்த சிறுமி கர்ப்பம் ஆனதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story