சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு
நாட்டறம்பள்ளி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் வீரமணி (வயது 32). குவைத் வேலை செய்து வருகிறார். தனது திருமணத்திற்காக விடுமுறையில் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 1-ந்் தேதி வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் மணமகன் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து கொண்டது உறுதியானது. இதனையடுத்து தாசில்தார் குமார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார், வீரமணி மீது வழக்கு பதிவு செய்தனர்். மேலும் சிறுமியை திருமணம் செய்து வைத்த மணமகனின் தந்தை முருகன் (52), தாயார் சரோஜா (50) மற்றும் சிறுமியின் தாயார் ஆகிய பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.