திருப்பி கேட்ட ஊழியரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு


திருப்பி கேட்ட ஊழியரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
x

திருப்பி கேட்ட ஊழியரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

ஆவூர்:

குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே உள்ள செங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 41). இவரது மனைவி சைனி (30). இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவி குழு வைத்து நடத்திக் கொண்டு அதன் தலைவியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சைனி தான் நடத்தி வரும் சுய உதவி குழுவிற்கு கீரனூரில் உள்ள ஒரு சிறு கடன் வழங்கும் நிறுவனத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து நிறுவனத்திற்கு மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகையை அவர் சரிவர செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர் மணப்பாறை அத்திகுளத்துபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் திருநாவுக்கரசு (29) என்பவர் நேற்று முன்தினம் சைனி வீட்டிற்கு சென்று அவரிடம் கடன் தொகையை செலுத்தாது குறித்து கேட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த சைனி கணவர் ராஜு, திருநாவுக்கரசிடம் எப்படி எனது வீட்டிற்கு கடன் கேட்டு வரலாம் என்று தகராறு செய்ததுடன் திருநாவுக்கரசை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திருநாவுக்கரசு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து கடன் கேட்டு வந்த ஊழியரை தாக்கிய ராஜூவை கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story