பெண் தபால்காரரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு


பெண் தபால்காரரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே பெண் தபால்காரரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

மணல்மேடு:

சீர்காழி எலத்தூரை சேர்ந்த சம்பந்தம் மகள் சங்கீதா(வயது 23). இவர் மணல்மேடு பகுதி தபால்காரராக வேலைபார்த்து வருகிறார். இவர் மணல்மேடு குறிச்சி பகுதியில் தபால்பட்டுவாடா செய்ய செல்லும்போது குறிச்சி மேலத்தெரு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் அச்சுதன் என்பவர் அவரை பின் தொடர்ந்து சென்று அவரிடம் பேசுவற்கு முயற்சி செய்துள்ளதாகவும், ஆனால் சங்கீதா பேசாமல் சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ தினத்தன்று மதியம் குறிச்சி கீழத்தெரு வழியாக சங்கீதா பைக்கில் சென்றபோது பின்தொடர்ந்து வந்த அச்சுதன், என்ன பேசமாட்டேங்கிறாய் என்று கேட்டதற்கு எதிர்த்து பதில் கூறிய சங்கீதாவை அச்சுதன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சுதனை தேடிவருகின்றனர்.


Next Story