நில மோசடி செய்ததாக நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு


நில மோசடி செய்ததாக நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x

நில மோசடி செய்ததாக நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கரூர்

நச்சலூர்,

குளித்தலை வட்டம் நெய்தலூர் ஊராட்சி கட்டாணிமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டியார். இவரது மகன் சீனிவாசன் (வயது52), இவர் தனது தந்தைக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கட்டாணிமேடு பகுதியை சேர்ந்த ராஜா (58), நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா (48) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணா ரெட்டியாரிடம் 10 சென்ட் நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு, போலி ஆவணம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக்கேட்ட சீனிவாசனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை நீதிமன்றத்தில் சீனிவாசன் மனுதாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நில மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா, ராஜா ஆகிய 2 பேர் மீதும் நேற்று குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story