பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த வழக்கு; 2 வாலிபர்கள் கைது


பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த வழக்கு; 2 வாலிபர்கள் கைது
x

விராலிமலையில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

சங்கிலி பறிப்பு

விராலிமலை சிதம்பரம் கார்டனை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி யசோதா (வயது 59). இவர் சென்னைக்கு சென்றுவிட்டு கடந்த ஜூலை 23-ந் தேதி அதிகாலை விராலிமலை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி அம்மன் கோவில் தெரு வழியாக அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் யசோதாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் யசோதா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிதம்பரம் கார்டன் பகுதியில் இருந்த கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர்கள் கைது

போலீசார் விசாரணை நடத்தியதில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றது திருச்சி பாலக்கரையை சேர்ந்த அட்டை என்கிற ஜெயபிரகாஷ் (26), மற்றும் அவரது நண்பர் எழில் என்கிற எழிலரசன் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story