ரூ.37 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர் மீது வழக்கு
கரூரில் ரூ.37 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
ரூ.37 லட்சம் மோசடி
கரூர் கோவை ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் 2017-2020-ம் ஆண்டிற்கான கணக்கு வழக்குகளை மண்டல மேலாளா் பல்ராம்தாஸ் தணிக்கை செய்தார். அப்போது அதே வங்கியில் பணிபுரிந்த பள்ளப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் அந்த வங்கியில் பணிபுரிந்த தற்காலிக பணியாளர் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.36 லட்சத்து 62 ஆயிரத்து 892 மோசடி செய்து இருந்தது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதுகுறித்து மண்டல மேலாளர் பல்ராம்தாஸ் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், கிருஷ்ணவேணி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். வங்கியில் வேலை பார்க்கும் ஊழியரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story