புகையிலை பொருள் விற்ற கடைக்காரர் மீது வழக்கு


புகையிலை பொருள் விற்ற கடைக்காரர் மீது வழக்கு
x

ஜோலார்பேட்டை அருகே புகையிலை பொருள் விற்ற கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கர்ணனின் கடையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கர்ணன் விற்பனைக்கு வைத்திருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story