சேலத்தில் துணிகரம்:சமையல் எண்ணெய் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி-கணவன்- மனைவி மீது வழக்குப்பதிவு


சேலத்தில் துணிகரம்:சமையல் எண்ணெய் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி-கணவன்- மனைவி மீது வழக்குப்பதிவு
x

சேலத்தில் சமையல் எண்ணெய் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி செய்த கணவன்- மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சமையல் எண்ணெய் வியாபாரி

சேலம் செவ்வாய்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்தவர் சயத் ரகுமான் (வயது 50). இவர் செவ்வாய்பேட்டை பழைய மார்க்கெட் பகுதியில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையில் புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்த கருணாகரன் (45) என்பவர் 16 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சயத் ரகுமான் கடையின் வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்தார். அப்போது கருணாகரன் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2018-ன் ஆண்டு வரை கடையில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கேட்ட போது சயத் ரகுமானுக்கு அவர் மிரட்டல் விடுத்தார்.

வழக்குப்பதிவு

இதையடுத்து இந்த மோசடி குறித்து சயத் ரகுமான் சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கருணாகரன் மோசடி செய்த பணத்தை தனது மனைவி பவித்ராவின் (42) வங்கி கணக்குகளில் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கருணாகரன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story