குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
கரூர்
கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் தாந்தோணி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கையுந்து பந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் 2-ம் இடமும் பிடித்தனர். சதுரங்கப் போட்டியில் குறுவட்ட அளவில் வெற்றி பெற்று மாணவன் பிரனவ் மாவட்ட போட்டிக்கு தேர்வு பெற்றார். கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.கிரீஸ் லிங்கேஸ்வரன், கிஷோர் மனிஷ், மகிலேஸ்வரன் ஆகியோர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதனையடுத்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் பேங்க் சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் ஜெயசித்ரா, விளையாட்டு ஆசிரியர்கள் சக்திவேல், சுதா மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story