திருவேடகத்தில் ஏடு எதிரேறிய விழா


திருவேடகத்தில் ஏடு எதிரேறிய விழா
x

திருவேடகத்தில் ஏடு எதிரேறிய விழா நடைபெற்றது.

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலிஅம்மன் சமேத ஏடகநாதர்சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும். அதன் புராண வரலாறு வருமாறு:-.

7-ம் நூற்றாண்டில் சங்க தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள் ஆதிக்கம் செலுத்திய போது மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாற பாண்டியனும் சமணத்தை பின்பற்றான். இதனால் சைவ சமயம் மீண்டும் தலைத்தோங்குவதற்காக பாண்டியனின் மனைவியான மங்கையற்கரசியார் எனும் தீவிர சிவ பக்தை சீர்காழியில் இருந்து தெய்வ குழந்தையான திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் மனதை மாற்றினார். அப்போது வெப்பு நோயை தீர்த்து வைத்தும் சமணர்களை அனல் வாதத்தில் வென்று புனல் வாதத்தில் திருப்பாசுர ஏட்டினை வைகை ஆற்றில் விட்டு அது வைகை ஆற்றினை எதிர்த்து வந்து வெற்றி பெற்ற இடமான திருஏடகத்தில் அந்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் நேற்றைய முன் தினம் இரவு ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.

இந்த திருவிழாவை முன்னிட்டு கேடயத்தில் விநாயகர், குதிரை வாகனத்தில் ஏடகநாதர், திருஞானசம்பந்தர் ஏடு வைகையாற்றில் படித்துறைக்கு வந்து சேர்ந்தது. வறண்ட வைகை ஆற்றில் பள்ளம் தோண்டப்பட்டு தார்ப்பாய் விரிக்கப்பட்டு இதில் தண்ணீர் நிரப்பி இருந்தனர். இந்த தண்ணீரில் ஏடு எதிர்கொள்வது போல் காட்சி நடைபெற்றது.பின்னர் பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கினார்கள்.கோவில் செயல் அலுவலர்கள் சரவணன், இளஞ்செழியன், பரம்பரை அறங்காவலர் சேவுகன்செட்டியார், கோவில்பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story