மனைவிக்கு மரியாதை செய்யும் விழா
ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவிக்கு மரியாதை செய்யும் விழா நடைபெற்றது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அறிவு திருக்கோவிலில் 18-வது ஆண்டு விழாவும், வேதாந்திரி மகரிஷியின் 112-வது பிறந்தநாள் விழாவும் மற்றும் மனைவிக்கு மரியாதை செய்யும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. பேராசிரியர் காலசாமி வரவேற்றார்.
சர்வஜித் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் வெள்ளை, ராமர் மற்றும் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கையை முருகன் வாசித்தார். இந்த விழாவில் மனைவிக்கு மரியாதை செய்யும் விதமாக மனைவி நல வேட்பு விழாவும் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்றம் மற்றும் அறிவு திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story