கலப்பு திருமணம் செய்த தம்பதியின் மகனுக்கு 'எந்த சாதி, மதத்தையும் சாராதவர்' சான்றிதழ்


கலப்பு திருமணம் செய்த தம்பதியின் மகனுக்கு எந்த சாதி, மதத்தையும் சாராதவர் சான்றிதழ்
x

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அம்பத்தூர் தாசில்தார் வழங்கினார்.

சென்னை

திரு.வி.க.நகர்:

சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் மனோஜ்(வயது 36). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், காதலித்து கலப்பு திருமணம் செய்து ெகாண்டார். இவர், தன்னுடைய 3 வயதான மகன் யுவனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் இணையதளம் மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தார்.

ஆனால் அம்பத்தூர் தாசில்தார் இதுவரையிலும் சான்றிதழை வழங்கவில்லை. வருகிற விஜயதசமி அன்று என் மகனை பள்ளியில் சேர்க்க உள்ளதால் அதற்குள் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனோஜ் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 2 வாரத்துக்குள் மனுதாரர் மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிழை வழங்க உத்தரவிட்டார். அதன்படி மனோஜின் மகன் யுவனுக்கு, 'எந்த சாதி பிரிவையும் சாராதவர் மற்றும் எந்த மதப்பிரிவையும் சாராதவர்' என்ற சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் ராஜசேகர் வழங்கினார்.


Next Story