வீட்டுவாசலில் விளையாடியபோது கார் மோதி குழந்தை பலி
வீட்டுவாசலில் விளையாடியபோது கார் மோதி குழந்தை பலி
மதுரை
மதுரை கோ.புதூர் அருகே உள்ள மீனாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவருடைய மகள் மித்ரா (வயது 3). நேற்று முன்தினம் காலை குழந்தை மித்ரா, வீட்டு வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மித்ரா மீது மோதியதில் படுகாயம் அடைந்தாள். ரத்த காயத்துடன் மயங்கி விழுந்த குழந்தையை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த மதுரை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கோபி (54) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story