வாழைப்பழத்தை விழுங்கிய குழந்தை சாவு; திண்டுக்கல்லில் பரிதாபம்


வாழைப்பழத்தை விழுங்கிய குழந்தை சாவு; திண்டுக்கல்லில் பரிதாபம்
x

திண்டுக்கல்லில் வாழைப்பழத்தை விழுங்கிய குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவருடைய மகன் சையது மவுலானா (வயது 1½). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, அங்கிருந்த வாழைப்பழ துண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கினான். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனை பார்த்த பெற்றோர் பதறி துடித்தனர். உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story