கள்ளகாதலனோடு இளம்பெண் உல்லாசம்...கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை தவறி விழுந்து பலி
துர்காதேவி தனது கள்ளக்காதலன் அஜய்யுடன் உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றதும், அப்போது அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை, கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்ததும் தெரியவந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டையில் வசிப்பவர் துர்காதேவி(26) இவரது கணவர் ராஜதுரை(31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தன் தாய் மாமாவின் தோட்டத்திற்கு சென்ற துர்காதேவி, இரவில் தன் குழந்தை மாயமானதாகவும், கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்ததாகவும் நாடகம் ஆடினார்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த அஜய்க்கும், துர்காவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தநிலையில் துர்காதேவி தனது கள்ளக்காதலன் அஜய்யுடன் உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றதும், அப்போது அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை, கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் துர்காதேவி, அவரது கள்ளக் காதலன் அஜய் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.