சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தையின் அழுகிய வலது கை அகற்றம்


சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தையின் அழுகிய வலது கை அகற்றம்
x
தினத்தந்தி 2 July 2023 3:53 PM IST (Updated: 2 July 2023 4:08 PM IST)
t-max-icont-min-icon

குழந்தையின் உடல் நலத்தை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஓராண்டுகளாக தலையில் ரத்த கசிவு காரணமாக அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில், கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட குறைபாட்டால் கை அழுகி தற்போது குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டுள்ள நிலையில், கையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை இன்று நடைபெற்றது.

தற்போது அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சையில் வலது கை அகற்றப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் நலத்தை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். குழந்தை நலமுடன் இருப்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையின் கை அழுகியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story