அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி, அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். இதனை கண்டித்து திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் இமாம் ஹஸ்ஸான் பைஜி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் உதுமான்அலி முன்னிலை வகித்தார். இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக்அலி, வடக்கு மாவட்ட தலைவர் நியாமத்துல்லா மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்தும், தேசிய புலனாய்வு முகமை அமைப்பை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.


Next Story