கோவையில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்
கோவையில் இருந்து சென்னைக்கு ஜோலார்பேட்ைட கல்லூரி மாணவர் சைக்கிளில் சென்று சாதனை படைத்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சி பாட்டாளி நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஜீவானந்தம் (வயது 18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சைக்கிள் ஓட்டி உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என முடிவு செய்தார்.
அதற்காக கோவையில் இருந்து சென்னை வரை சாதாரண சைக்கிளில் எங்கும் நிறுத்தாமல் செல்ல முடிவு செய்து கடந்த மாதம் 27-ந்தேதி அதிகாலை 4.12 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டார். 28-ந்தேதி காலை 9.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையை சென்றடைந்தார்.
568 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரத்தில் கடந்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து அப்துல் கலாம் உலக சாதனை அலுவலகத்திற்கு சென்று ஒப்படைத்தார். அங்கு அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
Related Tags :
Next Story