இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்-காதலனை தேடி வந்து கரம் பிடித்த கல்லூரி மாணவி


இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்-காதலனை தேடி வந்து கரம் பிடித்த கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் காதலனை தேடி வந்து கல்லூரி மாணவி கரம் பிடித்தார். இவர்கள் பாதுகாப்பு கேட்டு கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் காதலனை தேடி வந்து கல்லூரி மாணவி கரம் பிடித்தார். இவர்கள் பாதுகாப்பு கேட்டு கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சதீஷ் (வயது 27). வெல்டிங் தொழிலாளி. இவருக்கும் திருச்சியை சேர்ந்த மருதமுத்து -பரமேஸ்வரி என்பவரது மகள் மோகன செல்வி (வயது 20) என்பவருக்கும் கடந்த ஓராண்டாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். மோகன செல்வி திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களின் காதல் பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், பின்னர் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக காதலர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கோவிலில் திருமணம்

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் தன்னை காதலனுடன் இருந்து பிரித்து விடுவார்களோ என்கிற அச்சத்தில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு, வீட்டிலிருந்து புறப்பட்ட மோகன செல்வி நேராக தனது காதலனை தேடி கோத்தகிரியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். சதீஷ் தன் நண்பருடன் மோகன செல்வியை அழைத்துச் சென்று கோத்தகிரியில் உள்ள சக்திமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதே திருமண கோலத்தில் இருவரும் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்று, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சதீஷ் தாயார் மற்றும் உறவினர்களும் உடனடியாக கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் மோகன செல்வியின் பெற்றோர் வர மறுப்பு தெரிவித்தனர். எனவே திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை, மணமகனின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story