தா.பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கல்லூரி ஆசிரியை பலி


தா.பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கல்லூரி ஆசிரியை பலி
x

தா.பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கல்லூரி ஆசிரியை பலியானார்.

திருச்சி

தா.பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கல்லூரி ஆசிரியை பலியானார்.

கல்லூரி ஆசிரியை

தா.பேட்டை அருகே உள்ள பைத்தம்பாறை மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி பாமாபிரீத்தா (வயது 45). இவர் தனியார் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை கல்லூரியில் பணி முடித்துவிட்டு பாமாபிரீத்தா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் துலையாநத்தம் கிராமத்தில் உள்ள சந்தைக்கு சென்று காய்கறி வாங்கினார்.

பின்னர், அவர் பைத்தம்பாறை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜெம்புநாதபுரம் - தா.பேட்டை செல்லும் சாலையில் மங்கலம்புதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் சதீஷ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதைக ண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பாமாபிரீத்தா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story