பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கு ரூ.30 ஆயிரம்  இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:30 AM IST (Updated: 10 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் காசி அருள் ஒளி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், நிர்வாகிகள் செங்குட்டுவன், வீரப்பன், வைத்திலிங்கம், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளராக பாலகுரு தேர்வு செய்யப்பட்டார். காவிரி டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம்வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக சம்பா தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். வேதாரண்யம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story