விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
3 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடினார் .
சென்னை,
கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் இன்று அவர் விழுப்புரம் சென்றார்.
விழுப்புரம் கலெக்டர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடினார் .
தொடர்ந்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் 3 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளார் .
சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.