சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது


சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிளியனூர் அருகே விபத்து சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது பின்னால் வந்த 2 கார்கள் ஒன்றோடொன்று மோதல்

விழுப்புரம்

பிரம்மதேசம்

அரியானா மாநிலத்தில் இருந்து பேப்பர்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆலம்(வயது 35) என்பவர் லாரியை ஓட்டினார். நள்ளிரவு கிளியனூரை அடுத்ததென்கோடிப்பாக்கம் தனியார் பள்ளி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ஆலம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து நடந்த பகுதியில் இருள் சூழ்ந்து இருந்ததால் சாலையில் லாரி கவிழ்ந்து கிடந்தது தெரியாமல் பின்னால் அடுத்தடுத்து வந்த 2 கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 2 கார்களின் டிரைவர்களையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கிளியனூர் போலீசார் சாலையில் கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story