வாலிபர் தள்ளிவிட்டதில் சமையல் தொழிலாளி சாவு


வாலிபர் தள்ளிவிட்டதில் சமையல் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 July 2023 12:30 AM IST (Updated: 21 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தள்ளிவிட்டதில் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்


திண்டுக்கல் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் குமரன் (வயது 57). சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சாக்குகடை சந்து பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது காமராஜர்புரத்தை சேர்ந்த நிவாஸ்கண்ணன் (25), நாகராஜ் (28) ஆகியோரும் அங்கு வந்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து குமரனிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் குமரன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து குமரன் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.200-ஐ 2 பேரும் பறித்து சென்றுவிட்டனர்.


இதனால் ஏமாற்றம் அடைந்த குமரன் வீட்டுக்கு சென்று மனைவி பாக்கியலட்சுமியிடம் நடந்த சம்பவத்தை கூறினார். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்து, புறப்பட தயாரானார். அதை அறிந்த நிவாஸ்கண்ணன், நாகராஜ் ஆகியோர் குமரனை சந்தித்து செல்போன், பணத்தை திரும்ப கொடுத்தனர். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் குமரனை தாக்கி தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.


இதனால் கீழே விழுந்த குமரன் மயக்கம் வருவதாக மனைவியிடம் கூறினார். அதையடுத்து அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.





Next Story