திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற தாமிர கொப்பரை தயார்


திருப்பரங்குன்றம் மலையில்  கார்த்திகை மகாதீபம் ஏற்ற  தாமிர கொப்பரை தயார்
x

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற தாமிர கொப்பரை தயார் நிலையில் உள்ளது

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று (திங்கட்கிழமை) பகல் 12.15 மணி முதல் 12.30 மணிக்குள்கொடியேற்றத்துடன் தொடங்கி நடக்கிறது. திருவிழா தொடர்ந்து 7-ந்தேதி வரை நடக்கிறது. அதில் 5-ந்தேதி பட்டாபிஷேகமும், 6-ந்தேதி காலையில் தேரோட்டம், மாலையில் மகாதீபம் ஏற்றுதல் நடக்கிறது. மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் வழக்கம் போல கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 350 லிட்டர் நெய், 150 மீட்டர் கடா துணியிலான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மேலும் 3 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இதனையொட்டி உழாவாரப் பணிகுழுவினர் நேற்று தாமிர கொப்பரையை சுத்தப்படுத்தி மெருகு ஏற்றி தயார்படுத்தினார்கள். மேலும் அவர்கள் கார்த்திகை திருவிழாவையொட்டி கோவில் கதவுகளையும் மெருகு ஏற்றினார்கள்.


Next Story