வனப்பகுதியில் கிடந்த நாட்டு துப்பாக்கி
நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியில் முட்புதருக்குள் நாட்டு துப்பாக்கி கிடந்தது.
திண்டுக்கல்
நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியில் வனத்துறயைினர் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பட்டி-அம்பலகாரன்குளம் இடையேயான பகுதியில் முட்புதருக்குள் நாட்டு துப்பாக்கி கிடந்தது. மேலும் துப்பாக்கியுடன் கருமருந்து, இரும்பு கம்பி, அலுமினிய பட்டை உள்ளிட்ட பொருட்கள் கேட்பாரற்று கிடந்தது.
இதையடுத்து துப்பாக்கி மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய வன காப்பாளர் பீர்முகமது, அவற்றை நத்தம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக நாட்டு துப்பாக்கியை வீசி சென்ற நபர்கள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story