மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி தம்பதி பலி


மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி தம்பதி பலி
x

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெய்லர்

நெல்லை பாளையங்கோட்டை ரகுமத் நகர் 19-வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜன் (வயது 50). டெய்லரான இவர் அப்பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார்.

இவருடைய மனைவி கிரேஸ் பானுமதி (42). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

மினி லாரி மோதி சாவு

நேற்று மாலையில் அந்தோணி ராஜன், கிரேஸ் பானுமதி ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை கக்கன் நகர் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள், அங்குள்ள இணைப்பு சாலையில் இருந்து நாற்கர சாலைக்கு சென்றபோது, அந்த வழியாக கன்னியாகுமரியில் இருந்து நெல்லை நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அந்தோணி ராஜன், கிரேஸ் பானுமதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த தம்பதியின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story