கிணற்றில் விழுந்த மாடு, ஆடுகள் உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த மாடு, ஆடுகள் உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த மாடு, ஆடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள செவ்வாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவா. விவசாயி. இவருக்கு சொந்தமான மாடு 30 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்து விட்டது. இதுகுறித்து அவர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சுருளிராஜன் தலைமையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி மாட்டை உயிருடன் மீட்டு மேலே கொண்டுவந்தனர். பின்னர் அந்த மாடு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் கறம்பக்குடி அருகே உள்ள காடுவெட்டுவிடுதி கிராமத்தை சேர்ந்த பூமாலை என்பவரின் 2 ஆடுகள் 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிற்றின் மூலம் 2 ஆடுகளையும் உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த ஆடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story