மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி


மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி, உரிமையாளர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருவத்தூர் கிராமத்தில் பெரிய தெருவில் பன்னீர்செல்வம், சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் வாசலில் உள்ள மின்கம்பி காற்றின் காரணமாக அறுந்து வீட்டின் வாசலில் கட்டப்பட்டிருந்த மாட்டின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாட்டின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த சாந்தி வீட்டின் வாசல் கதவை திறக்கும் போது அதில் மின்கம்பி பட்டிருப்பதை அறியாமல் கதவை திறந்துள்ளதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் சாந்தியை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பசு மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story