மின் கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு பலி
பாணாவரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு பலியானது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கோகுல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (42) இவர் பசு மாடுகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை பாணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டின் மீது உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் பசுமாடு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாணாவரம் துணை மின் நிலைய ஊழியா்கள் மின்சாரத்தை துண்டித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினா் மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story