கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x

கொங்கராம்பட்டு ஏரிக்கரை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு ஏரிக்கரை உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் ராஜவேலு என்பவரின் பசுமாடு இன்று தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

கண்ணமங்கலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டதால் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story