சிறுத்தை தாக்கி பசு மாடு பலி


சிறுத்தை தாக்கி பசு மாடு பலி
x
தினத்தந்தி 17 Aug 2022 7:53 PM IST (Updated: 18 Aug 2022 10:23 AM IST)
t-max-icont-min-icon

கீழ் கோத்தகிரியில் சிறுத்தை தாக்கி பசு மாடு பலியானது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி பஜார் பகுதியை சேர்ந்தவர் சின்னான் என்பவரது மனைவி செல்லம்மா. விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அருகே உள்ள பகுதியில் விட்டிருந்தார். இரவு வெகு நேரமாகியும் மாடு கொட்டகைக்கு திரும்பவில்லை. இதனால் செல்லம்மா மாட்டை தேடி பார்த்தனர். இந்தநிலையில் நேற்று கீழ் கோத்தகிரி பஜார் பகுதியில் உள்ள கடைகளுக்கு பின்புறம் பசு மாடு கழுத்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது. இதனால் செல்லம்மா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வனச்சரகர் ராம் பிரகாஷ், வனவர் பிரகாஷ், வனகாப்பாளர் செல்வரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் சிறுத்தை தாக்கி பசு மாடு இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர் ஹேமா வரவழைக்கப்பட்டு, பசுமாட்டின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அதே பகுதியில் புதைக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதிக்கபட்ட பெண்ணுக்கு அரசு மூலம் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story