பள்ளி வளாகத்துக்குள் புகுந்த முதலை
சேத்தியாத்தோப்பு அருகே பள்ளி வளாகத்துக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்துச்சென்றனர்.
கடலூர்
சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பை அடுத்த மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் முதலை ஒன்று புகுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்தொிவித்தனர். அதன் பேரில் மாவட்ட வன அலுவலர்(கூடுதல் பொறுப்பு) ரவி உத்தரவின்பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர்(கூடுதல் பொறுப்பு) ரகுவரன் ஆலோசனைப்படி, சிதம்பரம் பிரிவு வனவர் செ.பிரபு தலைமையில் வனக்காப்பாளர்கள் ஞானசேகர் அன்புமணி, அமுதப்பிரியன் ஆகியோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த சுமார் 9 அடி நீளம் 150 கிலோ எடையுள்ள முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story