பட்டம் விடப்பட்ட நூலில் சிக்கித்தவித்த காகம்
பட்டம் விடப்பட்ட நூலில் சிக்கித்தவித்த காகம்
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகில் உள்ள வாத்தியார்விளையில் முன்னாள் ராணுவ வீரர் கோபாலன் என்பவரின் வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் பட்டம் விடப்பட்ட நைலான் நூலில் ஒரு காகம் சிக்கி பறக்க முடியாமல் தவித்தது. இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி, பட்டம் நூலில் சிக்கி தவித்த காகத்தை மீட்டனர். பின்னர் அதன் காலில் சிக்கியிருந்த பட்டத்துக்கான நைலான் நூலை அகற்றி பத்திரமாக பறக்க விட்டனர். பட்டம் நூலில் இருந்து விடுபட்ட காகம் சிறகடித்து பறந்து சென்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றது.
Related Tags :
Next Story