கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்


கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்
x

கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்

தஞ்சாவூர்

விடுமுறையையொட்டி கல்லணையில் மக்கள் கூட்டம் குவிந்தது. அப்போது அவர்கள் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர்.

கல்லணை

தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாகவும், காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாகவும் விளங்குவது கல்லணை. கல்லணைக்கு விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுவார்கள். இந்த வருட புத்தாண்டு மற்றும் விடுமுறை நாளாக ஞாயிற்றுக்கிழமையாக அமைந்ததால் நேற்று காலை முதலே திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் 2 சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பஸ்கள் மூலமாக கல்லணைக்கு வந்து சுற்றி பார்த்தனர். அப்போது கல்லணையில் உள்ள கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம், சிறுவர் பூங்கா, உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

உற்சாக குளியல்

சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு சாதனங்களிலும் சிறுவர்- சிறுமியர் விளையாடி மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் சிறுவர் பூங்கா வழியாக காவிரி ஆற்றில் இறங்கி ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் உற்சாக குளியல் போட்டனர்.

தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் இருந்ததால் காவிரி பாலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தோகூர் போலீசார் சீரமைத்தனர். மாமன்னன் கரிகாலன் சிலை, கரிகாலன் மணிமண்டபம் ஆகியவற்றின் முன்னே நின்று மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்று தண்ணீரில் இறங்கியும் ஏராளமானோர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story