மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் வழங்கிய 163 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை,, பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். இதேபோல கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். பயனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், சலவை பெட்டிகளையும் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (நிலம்) ஷாஜஹான், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அன்பரசி மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.