ஓட்டலில் சிலிண்டர் தீப்பற்றி ஏரிந்ததால் பரபரப்பு
வாணியம்பாடியில் ஓட்டலில் சிலிண்டர் தீப்பற்றி ஏரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி சந்தை ஜின்னா பாலம் அருகே தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று வழக்கம் போல் மதிய உணவு தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. மளமளவென பற்றிய தீ அருகே இருந்த அனைத்து பொருட்கள் மீதும் பரவியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த, பொதுமக்கள் மற்றும் அருகே இருந்த மற்ற கடைக்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக இந்த தீ விபத்து குறித்து வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் மற்றும் டவுன் போலீசார் சென்று தீ பிடித்து எரிந்த சிலிண்டர் வெடிக்கும் முன்பே தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story