டொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி


டொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி
x

தினத்தந்தி புகாா் பெட்டி

ஈரோடு

குப்பை அகற்றப்படுமா?

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் பிரிவு வருகிறது. இங்கிருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பை தூசுகள் விழுகின்றன. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

தடுப்பு சுவர் தேவை

வேம்பத்தியில் இருந்து நல்லமூப்பனூர்செல்லும் ரோட்டில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு பக்கவாட்டில் தடுப்பு சுவர்கள் இல்லை. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக அங்குள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

அருள், அந்தியூர்.

பராமரிக்க வேண்டும்

கோபி வாஸ்து நகரில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் காலை, மாலை என 2 வேளையும் வந்து செல்கிறார்கள். ஆனால் பூங்காவில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து உள்ளது. மேலும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே பூங்காவில் அதிகமாக வளர்ந்த செடிகள் மற்றும் புதர்களை அகற்றி பராமரிக்க வேண்டும்.

பொதுமக்கள், வாஸ்து நகர்.

குரங்குகள் அட்டகாசம்

அந்தியூர் பகுதியில் 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்த குரங்குகள் கடைகளில் தொங்கவிடப்பட்டு உள்ள பழங்களையும், வீட்டுக்குள் புகுந்து உணவுப்பொருட்களையும் எடுத்து சென்று அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

ரவீந்திரன், அந்தியூர்.

சுகாதாரக்கேடு

கோபி மேட்டுவளவில் கமலா ரைஸ் மில் 4-வது வீதியில் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேட்டுவளவு.

குண்டும்-குழியுமான சாலை

ஈரோடு குப்பைக்காட்டில் ரோடு குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. மேலும் இந்த ேராட்டில் பார்சல் அலுவலகங்கள் அதிகளவில் உள்ளது. இதனால் இங்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

இளங்கோ, ஈரோடு.


Next Story