வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்


வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
x

வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சியில் உள்ள கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி வளாக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை, கலை பண்பாட்டுத்துறை, இயல், இசை, நாடக மன்றம், செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகியவை இணைந்து ஸ்ரீராம் சர்மாவின் வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் நேற்று மாலை நடத்தினர். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நாடகத்தை தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிவகங்கை சீமையை மீட்டெடுத்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட சுதந்திரத்துக்காக அதிகமாக உழைத்தவர்கள் தமிழர்கள். இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவும், நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈரோடு, மதுரையில் நாடகம் நடைபெற்றுள்ளது. அடுத்து கோவை, சிவகங்கையில் நடைபெற இருக்கிறது" என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், கல்லூரி முதல்வர் லூயிஸ் பிரிட்டோ, எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நாடகத்தில் 18-ம் நூற்றாண்டை கண்முன்னே கொண்டு வரும் வகையில் 60 கலைஞர்கள் பங்கேற்று, தமிழ் மண்ணின் வீரசரித்திரத்தை தத்ரூபமாக நடித்து காட்டினர். இதில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த ஒவ்வொரு காட்சியையும் உணர்ச்சி பெருக்குடன் அனைவரும் உற்சாகமாக கைத்தட்டி ரசித்தனர். முடிவில் நாடகத்தில் சிறப்பாக நடித்த கலைஞர்களை அமைச்சர்கள் பாராட்டினர்.


Next Story