உயிர்சேதம் ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான மின்கம்பம்


உயிர்சேதம் ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான மின்கம்பம்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கடைவீதியில் உயிர்சேதத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்


திருவாரூர் கடைவீதியில் உயிர்சேதத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து மிகுந்த பகுதி

திருவாரூர் நகரில் காய்கறி, மளிகை, துணிக்கடை, நகை கடை போன்ற பெரும்பாலான கடைகள் அனைத்தும் கடைவீதியில் உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடைவீதி எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த கடைவீதி பிரதான சாலையில் உள்ள ஒரு மின் கம்பம் சேதமடைந்து எந்த நேரத்திலும் உயிர்சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.

அதாவது அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது.

கீழே விழும் நிலையில் மின்கம்பம்

இதனால் அந்த மின்கம்பம் தன் உறுதித்தன்மையை இழந்து எந்த நேரத்திலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பருவ மழை காலம் நெருங்கி வரும் நிலையில் அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழுந்து பொதுமக்களுக்கு உயிர்சேதம் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இந்த கடைவீதி மக்கள் போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுவதற்கு முன்பு வலுவிழந்த இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story