இறந்து கிடந்த முதியவர்


இறந்து கிடந்த முதியவர்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

உத்தமபாளையம் பழைய பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் சுமார் 70 வயது உடைய முதியவர் ஒருவர் நள்ளிரவில் இறந்து கிடந்துள்ளார். காலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியில் சென்று வந்தனர். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்கே சென்றது மனிதநேயம் என்று எண்ண தோன்றுகிறது.

இந்தநிலையில் அந்த வழியாக சென்ற போலீசார் ஒருவர் சந்தேகம் அடைந்து முதியவரின் அருகே சென்று தொட்டு பார்த்தார். அப்போது தான் அவர் இறந்தது போனது தெரியவந்தது. உடனே உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story