நாய்கள் துரத்தியதால் கடலில் தத்தளித்த மான்


நாய்கள் துரத்தியதால் கடலில் தத்தளித்த மான்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரையில் நாய்கள் துரத்தியதால் கடலில் தத்தளித்த மானை மீனவர்கள் உயிருடன் மீட்டனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரையில் நாய்கள் துரத்தியதால் கடலில் தத்தளித்த மானை மீனவர்கள் உயிருடன் மீட்டனர்.

கடலில் தத்தளித்த மான்

நாகை மாவட்டம் கோடியக்கரையில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், காட்டுபன்றி, முயல், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. சரணாலயத்தில் உள்ள மான்கள் இரைத்தேடி காட்டை விட்டு வெளியே வருவது வழக்கம்.

அதே போல் சம்பவத்தன்று சரணாலயத்தில் இருந்து வெளியே வந்த 4 வயது ஆண் புள்ளி மான் ஒன்று கோடியக்கரை கடற்கரையில் சுற்றிக்கொண்டிருந்தது. இதை பார்த்த நாய்கள், அந்த மானை விரட்டிச்சென்று கடிக்க முயன்றது. இந்த மான், நாய்களிடம் இருந்து தப்பிக்க கடலில் பாய்ந்து தத்தளித்து கொண்டிருந்தது.

மீனவர்கள் மீட்டனர்

அப்போது அந்த பகுதியில் மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் அருகே கடிநெல் வயல் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜோசப் உள்பட மீனவர்கள் நாய்களை விரட்டி விட்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்த மானை படகில் சென்று 1 மணிநேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மானுக்கு முதல் சிகிச்சை அளித்து பாதுகாப்புடன் காட்டுக்குள் கொண்டு விட்டனர்.

பாராட்டு

மானை மீட்ட மீனவர்களை வனத்துறையினரும், முன்னாள் மீனவ நலச்சங்க செயலாளர் சித்திரவேல் உள்பட மீனவ பஞ்சாயத்தார்களும் பாராட்டினர்.


Next Story