தண்ணீர் தேடி வந்த சினை மான் ரெயிலில் அடிபட்டு பலி
அரக்கோணம் அருகே தண்ணீர் தேடி வந்த சினை மான் ரெயிலில் அடிபட்டு பலியானது.
ராணிப்பேட்டை
அரக்கோணம்
அரக்கோணம்-பெங்களூரு ரெயில் மார்கத்தில் மேல்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து பெண் புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி வந்ததது. அந்த மான் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ஓடும் ரெயிலில் அடிபட்டு பலியானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ரெயிலில் அடிபட்டு பலியான பெண் மானை மீட்டனர். அந்த மான் 5 மாதம் சினையாக இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார், ராணிப்பேட்டை வனத்துறையினருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினரும், மருத்துவரும் பலியான சினை மானின் உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே தீ வைத்து எரித்தனர்.
Related Tags :
Next Story