அன்னதானத்திற்கு சமைத்த சாம்பாரில் தவறி விழுந்த பக்தர் சாவு


அன்னதானத்திற்கு சமைத்த சாம்பாரில் தவறி விழுந்த பக்தர் சாவு
x

கரூர் அருகே கோவிலில் அன்னதானத்திற்கு சமைத்த சாம்பாரில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

சாம்பாரில் தவறி விழுந்தார்

திருச்சி மாவட்டம், சோம ரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு அம்மாசி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 24). இவர் கடந்த 13-ந்தேதி கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை பகுதியில் உள்ள கரையூரான் நீலமேகம் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இ்ந்தநிலையில் கோவிலில் நடந்து கொண்டிருந்த அன்னதானத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறும் வேலையில் பார்த்திபன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு அண்டாவில் சாதத்தை எடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருகில் சூடாக இருந்த சாம்பார் அண்டாவில் தவறி விழுந்தார்.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த பார்த்திபனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பார்த்திபனின் தந்தை ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பார்த்திபனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story