நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்
பேரளம் அருகே சக்கரகொத்தங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவாரூர்
நன்னிலம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சக்கர கொத்தங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சக்கர கொத்தங்குடியில் நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story