கண்மாயில் மூழ்கி மாற்றுத்திறனாளி சாவு


கண்மாயில் மூழ்கி மாற்றுத்திறனாளி சாவு
x

கண்மாயில் மூழ்கி மாற்றுத்திறனாளி பாிதாபமாக இறந்தார்.

விருதுநகர்

சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்தவர் உத்தமன் (வயது 42). பாத்திர வியாபாரியான இவரது சகோதரர் பரமசிவம் (32). மாற்றுத்திறனாளியான பரமசிவம் திருமணமாகாத நிலையில் தனது சகோதரர் உத்தமனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் உத்தமன் விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரத்தில் பாத்திர வியாபாரத்திற்காக வந்தவர் அங்குள்ள சத்திரத்தில் தங்கியிருந்தார். பரமசிவம், தனது சகோதரர் உத்தமனை பார்க்க வந்தவர் அப்பகுதியில் உள்ள சிலருடன் கண்மாயில் மீன் பிடிக்கச் சென்றார். வெகு நேரமாகியும் பரமசிவம் திரும்பி வராததால் அங்கு சென்று பார்த்தபோது கண்மாய் கரையில் பரமசிவம் கொண்டு சென்ற தூண்டிலும் பணமும் இருந்தது. உத்தமன் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கண்மாயில் தேடிய போது பரமசிவம் கண்மாயில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமசிவத்தின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உத்தமன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story